திறமை, கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, முழுமையான ஈடுபாடு- இவை அத்தனையும் இருந்தும் பலர் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன?
பொதுவாகவே அனைவரும் நல்ல பணவசதியுடன் வாழவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். புகழுடன் இருக்க நினைப்பார்கள். அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்வார்கள். ஆனாலும் பலரால் வெற்றிபெற முடியாமல் போகும்.
அதற்குக் காரணம்- அவர்களின் ஜாதகத்திலிருக்கும் கிரக நிலைதான்.
ஒருவர் தன் முற்பிறவியில் நல்ல கர்மங்களைச் செய்திருந்தால், அதற்குரிய பலன் இந்தப் பிறவியில் அவருக்குக் கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் முயற்சி என்று கூறப்படுவது லக்னாதிபதியின் பலம்தான். அதேசமயம் சுகத்தைத் தருவது அவருடைய 4-க்குரிய கிரகம். அந்த 4-க்குரிய கிரகம் கெட்டுப்போயிருந்தால், கடுமையாக உழைத்தாலும் அவரால் சந்தோஷமாக வாழமுடியாது.
அந்த சந்தோஷம் கிடைப்பதற்கு உறுதுணையாக இருப்பது 9-க்குரிய கிரகம்- பாக்கிய ஸ்தானாதிபதி. ஒருவர் ஜாதகத்தில் 9-க்குரியவர் 8-ல் அல்லது 8-க்குரிய கிரகம் 9-ல் இருந்தால், அவர் பாக்கியஹீனராக இருப்பார். அதாவது அதிர்ஷ்டம் கைகொடுக்காத மனிதர். அவர் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் பலரும் அவரை ஏமாற்றுவார்கள். என்னதான் உழைத்தாலும் வெற்றியே கிடைக்காது.
ஒரு ஜாதகத்தில் லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். அந்த சுக்கிரன் நீசமாக அல்லது ராகுவுடன் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகத்தில் 4-க்கு அதிபதி கெட்டுப்போயிருந்தால், அவருக்கு லட்சுமியின் அருள் கிடைக்காது. அவர் கடுமையாக உழைத்துதான் பணத்தைச் சம்பாதிக்கவேண்டும். சேமிக்க நினைத்தாலும் முடியாது. உடனடியாக செலவாகிவிடும்.
ஒரு ஜாதகத்தில் மனக்காரக கிரகமான சந்திரன் பலமாக இருந்தால், அவர் எதையும் தைரியத்துடன் செய்வார். சந்திரன் பலவீனமாக அல்லது நீசமாக இருந்து, லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவருடைய முயற்சி சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்காது. அவர் கோப குணத்தால் காரியத்தைக் கெடுத்துக்கொள்வார்.
லக்னாதிபதி, சூரியனுடன் 4-ல் இருந்து, 7-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதித்து எல்லாருக்கும் கொடுப்பார். ஆனால் அவருக்கு ஏதாவது நோய் வந்தால் யாரும் உதவமாட்டார்கள்.
ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி, 8-ல் ராகு, 3-ல் சந்திரன் இருந்தால் அவர் கடுமையாக உழைப்பார். ஆனால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் அவரது பணியில் தடைகளை உண்டாக்குவார்கள். அதனால் பணஇழப்பு உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் அஸ்தமனமாக இருந்து, 9-ல் ராகு, 11-ல் சந்திரன் இருந்தால், அவர் தன் 31 வயதுவரை கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் அவருக்கு பெரிய நன்மைகள் எதுவும் கிடைக்காது.
6-ல் சனி, 9-ல் ராகு, 11-ல் சந்திரன் இருந்து, லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்தால், அவர் கடுமையாக உழைப்பார். பலருக்கும் நல்லவற்றைச் செய்வார். ஆனால் அவரை எல்லாரும் ஏமாற்றுவார்கள்.
மனித முயற்சியால் வெற்றி கிடைக்க வேண்டுமென்றால், 4-க்கு அதிபதி, 9-க்கு அதிபதி, 11-க்கு அதிபதி ஆகியவை சரியான இடத்திலிருக்க வேண்டும். அதேபோல தசாகாலங்கள் சரியாக நடக்கவேண்டும்.
லக்னாதிபதியும், 11-க்கு அதிபதியும் 6 அல்லது 8-ஆம் வீட்டில் நவாம்சத்தில் இருப்பது கூடாது.
பரிகாரங்கள்
படுக்கையறையை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அங்கு செருப்புகளை விடக்கூடாது. கருப்புநிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும்.
தினமும் சூரிய காயத்ரி மந்திரம் அல்லது ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிப்பது நற்பலனைத் தரும்.
வருடத்துக்கு ஒருமுறையாவது குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று பூஜை செய்வது நல்லது. வளர்பிறையின் இரண்டாம் நாள், பத்தாம் நாள் ஆகியவற்றில் வீட்டில் தூப தீபம் ஏற்றவேண்டும்.
வீட்டு வாசலைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். வீட்டின் வடகிழக்கில் குப்பை இருக்கக்கூடாது. தினமும் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவந்து வழிபடுவது நல்லது. லக்னாதிபதி, 9-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணியலாம்.
செல்: 98401 11534